Thursday, June 25, 2020

கொரோனா தொற்றாளர்களில் 80 வீதமானோர் பூரண சுகம்... இன்று 40 பேர் வீடுகளுக்குப் பயணம்!

இன்று முற்பகல் 10.00 யுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்தினுள் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகியிருந்த 40 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளனர். குறித்த காலப்பகுதியில் 10 பேர் நோய்த்தொற்றுக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களின் எண்ணிக்கை 388 ஆகும். இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்ைக 2001 ஆக இருப்பதுடன், அவர்களின் 1602 பேர் பூரண சுகமடைந்துள்ளனர் எனவும் இலங்கையில் சுகமடைந்த நோயாளர்களின் எண்ணிக்கை எண்பது வீதத்தை அடைந்துள்ளது எனவும் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment