Tuesday, May 26, 2020

திரையரங்குகளை திறப்பது சம்பந்தமாக எந்த தீர்மானமும் இல்லை

திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு இதுவரை தீர்மானம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சிகையலங்கார நிலையங்கள் மற்றும் அழகுக்கலை நிலையங்கள் தற்போதும் சுகாதார ஆலோசனையின் பிரகாரம் இயங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சிறு ஹோட்டல்கள் மற்றும் சிறிய வர்த்தக நிலையங்களை திறப்பதற்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதன்போது கூறியுள்ளார்.

No comments:

Post a Comment