Tuesday, May 26, 2020

கத்தார் விமானம் இலங்கையரை ஏற்றி இலங்கைக்கு வரத் தடை!

கத்தாரில் இருந்து இலங்கைக்கு இலங்கையர்களை அழைத்து வருவதற்கான முடிவு தற்காலிகமாக இரத்துச் செய்யப்படும் என்று வெளியுறவு தொடர்பான ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் அட்மிரால் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

19 ஆம் தேதி குவைத்திலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 466 இலங்கையர்களில், சுமார் 70 பேர் தற்போது கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யுஎல் -218 விமானம் கத்தார் தோஹாவிலிருந்து நாளை (27) அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment