Monday, May 25, 2020

இலங்கையிலிருந்து கொரோனா தொற்றுக்குள்ளான பத்தாவது நபர் மரணம்

இலங்கையின் பத்தாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. இறந்தவர் திருகோணமலையில் உள்ள 'மங்கி பிரிட்ஜ்' தனிமைப்படுத்தல் மையத்தில் சிகிச்சை பெற்று வந்த கோவிட் தாக்குதலுக்குள்ளான பெண்மணியாவார்.

குவைத்திலிருந்து இலங்கைக்கு வருகைதந்த 52 வயதுப் பெண்மணியே இவ்வாறு இறந்துள்ளதாகவும் அந்த பெண் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் பெண்ணின் உயிரியல் மாதிரிகளை பரிசோதித்தபின், அவருக்கு கோவிட் தொற்று இருந்தமை கண்டறியப்பட்டது எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

தற்போது இலங்கையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment