Wednesday, May 20, 2020

அம்பாறையில் நேற்று வந்தது சுனாமிதானா?

தற்போது பெய்து வருகின்ற கடும் மழையுடன் கூடிய காலநிலைக்கிடையில் நேற்றைய தினம் அம்பாறை - காரைத்தீவுப் பிரதேசத்தில் 100 மீட்டர் அளவில் நிலத்தை நோக்கி கடல் பாய்ந்து வந்துள்ளது.

சுனாமி மீண்டும் மீண்டெழுந்து வருகின்றதோ என அப்பிரதேச மக்கள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர்.

மீன் பிடித்தொழிலாளர்கள் கடலிலிருந்த தங்களது படகுகளை கரையை நோக்கிச் செலுத்துவதற்குத் ஆவன செய்துள்ளனர். எவ்வாறாயினும் இது சுனாமி அலையே அல்ல என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது

No comments:

Post a Comment