Friday, May 29, 2020

இரண்டு மாதங்களின் பின்னர் கொழும்பு மாநகர சபை இன்று கூடியது!

கொவிட் - 19 ஆட்கொல்லி நோய் காரணமாக இரண்டு மாதங்களாக கூட்டப்படாமலிருந்த கொழும்பு மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம், நகராதிபதி ரோஸி சேனாநாயக்கவின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை கூடியது.

தற்போது நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இரண்டு மாதங்களுக்குப் பிறகு கொழும்பு மாநகர சபையின் அமர்வு இவ்வாறு இடம்பெற்றதாக நகராதிபதி ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார்.

சபையில் போதியளவு இடம் இல்லாமையினால் உச்ச அளவு சமூக இடைவெளிப் பேணி, முகமூடி அணிந்து சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment