Monday, May 11, 2020

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் நீடிப்பு


கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரண்டு மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு அமுலிலுள்ள போதிலும் இன்று ஏற்கனவே திட்டமிட்டபடி அன்றாட செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று முதல் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 8 மணி தொடக்கம் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment