நாடு முழுவதும் அமுலாகும் வகையில் நேற்றிரவு 8 மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்குச் சட்டம் 11ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
நாளாந்த இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை இயல்பு நிலைக்கு கொண்டுவருதல் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இடர்வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்குச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
நாடு முழுவதும் நேற்று இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு ச்சட்டம் மே மாதம் 11ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment