இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றையதினம் நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதற்கமைய நேற்றைய நாளின் நிலைமையின் அடிப்படையில் நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினரின் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 16 கொரோனா தொற்றாளர்களில் 9 பேர் கடற்படையினர் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஏனைய 07 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்டவர்கள் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
504 கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 187 பேர் மருத்துவ கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.

No comments:
Post a Comment