Friday, May 1, 2020

கொரேனா தொற்றுக்குள்ளானர் இனங்காணப்பட்டதும் தொழிற்சாலைகள் 21 அடைப்பு!

ஹொரான, பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள பிரபலமான தொழிற்சாலையை ஒன்றின் சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றிய மேற்பார்வையாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார் என்று உறுதியானதும் பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்குட்பட்ட 21 தொழிற்சாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விதுரா விக்ரமநாயக்கவின் ஆதரவில் இங்கிரியா சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் 350 தொழிலாளர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தலை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அகலவத்த பகுதியில் கொரோனா வைரசு பீடிப்புக்குள்ளான நபர் ஒருவர் தற்போது ஐ.டி.எச் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். அவர் குறித்த நபரின் உறவினர் ஆவார். அவருடன் இருந்த உணவக சமையல்காரரும் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபருடன் தொடர்புடைய இன்னும் பலர் சுய தனிமைப்படுத்தலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment