Sunday, April 26, 2020

தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கத்திற்கேற்ப ஊரடங்கில் வெளிச்செல்ல முடியும்! ஜனாதிபதி ஊடகப்பிரிவு

ஊரடங்கு அமுலில் இருக்கும் காலங்களிலும் அதுதொடர்பில் பொதுமக்கள் கருத்திற்கொள்ளாமல் அங்குமிங்குமாக நடமாடுவதால், அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் செல்வதாக இருந்தாலும், அவர்கள் அவ்வாறு வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு முறையான திட்டமொன்றை அரசாங்கம் அமுலுக்குக் கொண்டுவந்துள்ளது.

வெளிச்செல்வோர் யாராக இருந்தாலும் அவர்களது தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கங்களை அடிப்படையாக வைத்தே அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என. ஜனாதிபதி ஊடகப்பிரிவு புதியதொரு அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதற்கேற்ப திங்கட் கிழமை இலக்கம் 1 மற்றும் 2 இலக்கத்தைக் கொண்ட தேசிய அடையாள அட்டையைக் கொண்டவர்கள் மட்டுமே வெளிச்செல்ல முடியும்.

வாரத்தின் ஏனைய நாட்களில் வீட்டிலிருந்து வெளிச்செல்வதற்கு கீழ்வரும் இலக்கங்களின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.

செவ்வாய்க்கிழமை : அடையாள அட்டையின் கடைசி இலக்கம் 3 அல்லது 4

புதன் கிழமை : அடையாள அட்டையின் கடைசி இலக்கம் 5 அல்லது 6

வியாழக்கிழமை : அடையாள அட்டையின் கடைசி இலக்கம் 7 அல்லது 8

வெள்ளிக்கிழமை : அடையாள அட்டையின் கடைசி இலக்கம் 9 அல்லது 0

No comments:

Post a Comment