Sunday, April 19, 2020

தேர்தல் ஆணைக்குழுவின் முடிவே எங்கள் முடிவு! பிரதமர்

பொதுத் தேர்தல் நடாத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை ஏற்போமே தவிர, அரசாங்கத்திற்கு விருப்பமான முறையில் செயற்பட முடியாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத்தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானித்தால் அதற்கு உடந்தையாக நாங்கள் செயற்படுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது நாடு போற்றத்தக்க முறையில் பயணித்துக் கொண்டிருப்பதாகப் பலதரப்பினரும் குறிப்பிடுகின்றனர். யார்தான் என்ன சொன்னாலும் தேர்தல்கள் சட்டத்திற்கு எதிராக யாராலும் செயற்படமுடியாது என்பதால் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ஏற்ப அரசாங்கம் இயங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment