Sunday, April 19, 2020

மனோ கணேசனுக்கு எதிராக ஜிநானந்த தேரர் முறைப்பாடு..

கொரோணா பாதிப்பு தொடர்பான தகவல்களை அரசாங்கம் மூடிமறைப்பதாக முன்னாள் அமைச்சர் மனோகணேஷன் தெரிவித்திருந்தார். இக்கருத்தானது இலங்கையில் கொரோணாவினை ஒழிப்பதற்கு சுகாதார மற்றும் இலங்கை புலனாய்வுத்துறையினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவதாக தெரிவித்து பௌத்த தகவல் மத்திய நிலையத்தின் நிறைவேற்று இயக்குனர் ஜிநானந்த தேரர் நேற்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது முறைப்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேரர், மனோகணேஷனின் மேற்படி செயற்படானது சமூத்தில் பீதியை உண்டுபண்ணும் கருத்தாகையால் , அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டுள்ளேன் என்றார். சமூகவலைத்தளங்களில் பொய்பிரச்சாரங்களை மேற்கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது போல் முன்னாள் அமைச்சர் மீதும் சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

இது தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர் எஸ்பி திஸாநாயக்க , கட்சித்தலைவர் ஒருவர் கொரோணா சம்பந்தமாக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தவறானது என்று தெரிவித்துள்ளார். அவர் 8 வகுப்பு சித்தியடைந்தவர் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் இரண்டாம் வகுப்பும் சித்தியடையவில்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment