Thursday, April 23, 2020

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற 7 பேர் சுய தனிமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு காலப்பகுதியில் சட்டவிரோதமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற 7 பேர் சுய தனிமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் குறித்த நபர்கள் தங்களின் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட நிலைமை சுமூகமாகி வரும் நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து இவ்வாறு சட்ட விரோதமாக வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.


No comments:

Post a Comment