Friday, April 24, 2020

தனியார் வைத்தியசாலைகளின் ஒத்துழைப்புடன் கொவிட் -19 தொற்றைக் கண்டறிவதற்கான பி.சி.ஆர் பரிசோதனை

தனியார் வைத்தியசாலைகளின் ஒத்துழைப்புடன் கொவிட் -19 தொற்றைக் கண்டறிவதற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மாலை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இவர்கள் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வசிக்கும் சிலருக்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் இன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை அண்மையில் பிலியந்தலையில் இனங்காணப்பட்ட கொவிட் -19 தொற்றுக்கு இலக்காகியவரின் தாயாரும் தொற்றுக்குள்ளான சந்தேகத்தின் பேரில் ஹோமகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment