Sunday, April 12, 2020

சகல பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 18 இல் ஆரம்பம்!

கொரோனா தொற்றுக் காரணமாக இலங்கையில் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை அறிந்ததே. நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்ைக நாளுக்கு நாள் அதிகரிக்கின்றதும் குறைந்து செல்வதுமாக இருக்கின்ற காலகட்டத்தில், இலங்கையில் கல்வி நடவடிக்கைகள் கேள்விக்குறியாக மாறாதிருப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி நடவடிக்ைககள் மேற்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே 4 ஆம் திகதி மீண்டும் பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் பணிகள் ஆரம்பமாகவுள்ளதுடன், இறுதியாண்டு மாணவர்களின் கல்வியியற் செயற்பாடுகளுக்காக மே 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment