Monday, December 16, 2019

சுவிஸ் தூதரக பெண்ணுக்கு 30 ஆம் திகதி வரை விளக்கமறியல்

கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்ளூர் பெண் ஊழியரான கனியா பானிஸ்டரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொய்யான வாக்குமூலங்களை வழங்கியமைக்காக அவரை கைதுசெய்து நீதமன்றில் ஆஜர்படுத்துமாறு இன்று சட்ட மா அதிபர் சி.ஐ.டி. என்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர்.

இந் நிலையில் அவர் இன்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போதே நீதிவான் அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment