ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன. அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. ஆகவே இன்று மாலை 5 மணி வரை அரச நிறுவனங்களில் சுமார் நான்கு ஆண்டுகளில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரையில் 950 முறைப்பாடுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் சுமார் 31 முறைப்பாடுகள் ஆரம்பகட்ட விசரணைகளுக்காக விசேட பொலிஸ் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. தற்போதுவரை கிடைத்த முறைப்பாடுகளை நோக்குமிடத்து பெரும்பாலானவை அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள் மீதே முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பல மில்லயன் ரூபா மோசடி செய்தமை தொடர்பில் உயரதிகாரிகள் மீது குறித்த முறைப்பாடுகள் முன் வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த முறைப்பாடுகளை அவதானிக்கும்போது அரசியல்வாதிகளை விட அரச அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment