இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது. நாடு முழுவதிலுமுள்ள 85 நிலையங்களில் இந்த தேர்தல் நடைபெற்று வருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உப செயலாளர் சட்டத்தரணி சமல் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.இந்த தேர்தலின் போது தலைவர் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நிலையில் காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தலில், 16 ஆயிரம் சட்டத்தரணிகள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இன்று நடை பெறும் தேர்தலில் தலைவர் பதவிக்கும் செயலாளர் பதவிக்கும் இரண்டு பேர் வீதம் போட்டியிடுகின்றனர்.
வாக்களிக்கும் சந்தர்ப்பம் மாலை 5.00 மணியுடன் நிறைவுபெறும்.
வாக்களிப்பின் பின்னர் பிராந்தியங்களிலுள்ள வாக்குகள் எண்ணப்பட்டு கொழும்பிலுள்ள பிரதான வாக்கெண்ணும் நிலையத்தினுாடாக முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உப செயலாளர் சட்டத்தரணி சமல் பெர்னாண்டோ மேலும் கூறினார்
No comments:
Post a Comment