Monday, March 24, 2014

நல்லிணக்க முனைப்புக்களுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் – ரஸ்யா

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக சகல பரிந்துரைகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு பூரண அதரவளிக்கப்படும் என ரஸ்ய தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி இகோர் பாவ்லோவ் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீடு செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைவிட இலங்கை மற்றும் ரஸ்ய ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் மிகச் சிறந்த புரிந்துணர்வு காணப்படுவதுடன் எதிர்காலத்தில் இராணுவ உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேலும் பிணைப்பினை அதிகரித்துக்கொள்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment