Monday, March 24, 2014

எல்.ரீ.ரீயின் புதிய தலைவர் கோபியின் முக்கிய கையாள் கைது!

எல்ரீரீஈ அமைப்பு மீண்டும் இலங்கையினுள் தலைதூக்குவதற்காக வட மாகாணத்தில் நிலைகொண்டுள்ள முன்னாள் முக்கிய புலி உறுப்பினரான கோபி என்பவரின் முக்கிய உதவியாளரான மாணிக்கம் குவான் கரன் என்பவரை, யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டைப் பிரதேசத்தில் வைத்து இராணுவ விசேட பிரிவினர்களில் சிலர் கைதுசெய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக அவர். கொழும்பு பயங்கரவாத விமர்சனப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம், இரகசியமாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் புதைக்கப்பட்டிருந்த குண்டுகளைக் கண்டுபிடிப்பதற்காக பயன்படுத்துகின்ற உபகரணமொன்றும், ரீ 56 ரவைகள் 1500 அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

(கேஎப்)

No comments:

Post a Comment