
சரத் பொன்சேகா தொடர்ந்தும் சர்வாதிகாரி போன்று செயற்படும் பட்சத்தில், அவருடன் இணைந்து அரசியலில் ஈடுபட மாட்டோம். நாம், இவர் தொடர்பில் தெளிவான விளக்கத்தை பெற்றுள்ளோம். தொடர்ந்தும் தாமதித்து விளக்கம் பெறுவதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்பு களிலிருந்து தவிர்ந்து கொள்ளும்
வகையில், மேல் மாகாண அபேட்சகர்கள் அந்தஸ்திலிருந்து விலகிக் கொள் ளவதாக, 4 அபேட்சகர்கள் தெரிவித் துள்ளனர். சரத் பொன்சேகாவின் முறைகேடான செயற்பாடுகள் மற்றும் நிதி மோசடிகள் காரணமாக, கட்சியிலிருந்து ராஜினாமா செய்து கொண்டதாகவும், இவர்கள் தெரிவிக்கின்றனர். பொன்சேகாவிடமிருந்து கட்சியை பாதுகாப்பதற்காக, ஜன நாயகத்தை பாதுகாக்கும் அமைப்பொன்றும் ஸ்தாபிக்கப்பட்டது.
No comments:
Post a Comment