அழிந்து போன எல்.ரி.ரி.ஈ யினருக்கு மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்க மாட்டோம். இதனை நாம் தெளிவாக கூறுகின்றோம். தேசிய பாதுகாப்பிற்கு நாட்டில் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு அடுத்ததாகவே, ஏனைய விடயங்கள் கவனத்திற்கொள்ளப்படும்.
தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்க எவரும் முயற்சித்தால், பொது மக்கள் அதுபற்றி தமது பிரதேசங்களில் உள்ள இராணுவத்தினர் அல்லது பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும். நாம் அவர்களை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment