இந்திய- இலங்கை மீனவர்கள் அத்து மீறல்களில் ஈடுபடும் விவகாரம் இராஜதந்திர ரீதியில் அணுகப்பட வேண்டுமென தவிர வன்முறைகளோ அல்லது திட்டமிட்ட குற்றச் செயல்களோ நடைபெற அனுமதியளிக்கக் கூடாது என கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷியாவில் நடைபெற்ற கடற் பாதுகாப்பு குறித்த மாநாடு ஒன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனைவிட இரு தரப்பினரும் மனிதாபிமான காரணிகளை கருத்திற் கொண்டு பேச்சுவார்த்தைகளை நடாத்துவதன் மூலமே பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இரு தரப்பு புரிந்துணர்வு அடிப்படையிலேயே இலங்கை இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும் என ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment