Friday, January 31, 2014

ஆவா குழு எண்மருக்கு பிணை மூவருக்கு விளக்கமறியல்!

யாழில் நடைபெற்ற பல்வேறு குற்ற செயல்கள் மற்றும் வாள் வெட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்ட ´ஆவா´ குழுவை சார்ந்த எட்டு பேருக்கு இன்றைய தினம் பிணை வழங்கபட்டதுடன் மூவரை தொடர்ந்து எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவு இடப்பட்டுள்ளது.


யாழில் நடைபெற்ற பல்வேறு குற்ற செயல்கள் மற்றும் வாள் வெட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என ஆவா குழு எனும் இக்குழுவினை சேர்ந்த 13 பேரினை கடந்த 6 ஆம் திகதி கோப்பாய் பொலிசார் கைது செய்திருந்ததுடன் கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இருவருக்கு பிணை வழங்கபட்டதுடன் ஏனைய 11 பேரையும் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு இடப்பட்டிருந்தது. 

இந் நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது 8 பேருக்கு பிணை வழங்கபட்டுள்ளதுடன் ஏனைய மூவரையும் எதிர்வரும் 13 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment