எம்பிலிப்பிட்டியில் மாத்திரம் ஆண்டொன்றுக்கு 497 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். 27 பேர் தாய்மையடைகின்றனர்.
எம்பிலிபிட்டிய நீதிமன்ற வலயத்திற்குட்பட்ட பெல்மடுல்ல எம்பிலிபிட்டிய பிரதேசங்களில் மாத்திரம் சென்ற வருடம் (2013) பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட மிக இளம் வயதுச் சிறுமிகளின் தொகை 497 என அறியவந்துள்ளதாகவும், அவர்களில் 27 பேர் தாய்மையடைந்துள்ளதாகவும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
அத்திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் விஜயராணி ரத்னசேக்கர குறிப்பிடும்போது, இவ்வாறு தாய்மைப்படுத்தப்படும் சிறுமிகள் 18 வயதிற்குக் குறைந்தவர்கள் எனக் குறிப்பிடுகின்றார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்துவம் பெறுகின்ற பிரதேச அரசியல்வாதிகளினாலும், அவர்களின் உதவியாளர்களினாலும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட உள்ளனர் என பத்திரிகை மற்றும் ஊடக ஆய்வுகளிலிருந்து தெரியவருகின்றது.
(கேஎப்)

No comments:
Post a Comment