Tuesday, December 17, 2013

சவுதியில் ஏற்பட்ட நச்சுவாயுக் கசிவில் இலங்கையர் ஒருவர் பலி!


சவுதி அரேபியாவில் நிலக்கரி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட நச்சுவாயுக் கசிவால் இந்தியர் ஒருவரும் இலங்கையர் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடக் இந்த நச்சுவாயுவை சுவாசித்த மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சவுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற இந்தச்சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த 34 வயதான ஜானக்க விக்ரமாராச்சி என்பவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு இலங்கையர் பாதிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment