Thursday, December 19, 2013

இரண்டு இந்திய கரையோர பாதுகாப்பு கப்பல்கள் இலங்கை விஜயம்!

இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த "விஸ் வாஸ்ட்" மற்றும் "ராஜ்கமல்" ஆகிய இரண்டு கப்பல்கள் நல்லெண்ண அடிப்படையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகத் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் நல்லெண்ண அடிப்படையில் இலங்கை வந்துள்ள இந்திய கரையோரப் பாதுகாப்பு கப்பல்கள் இலங்கையில் சில பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது என தெரிவித்துள்ள கடற்படை இந்தக்கப்பல்கள் இரண்டும் இலங்கை, மாலைதீவு மற்றும் இந்தியா நாடுகள் பங்கேற்கும் விசேட பயிற்சிகளிலும் பங்கேற்க உள்ளது எனத்தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு கப்பல்களிலும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கை யிலான கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் விஜயம் செய்துள்ளதாக குறிப்பிட்ட கடற்படை தற்போது இந்தக்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் நங்கூர மிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment