Monday, December 16, 2013

சீனா விண்கலம் நிலவில் தரையிறங்கியது!

சமீபகாலமாக விண்வெளித்துறையில் தீவிர ஆர்வம் காட்டி வரும் கம்யூனிஸ்ட் நாடான சீனா, தனது ஆய்வின் ஒருபகுதியாக நிலவை ஆய்வு செய்வதற்காக, "சாங்கி-3' என்ற ஆளில்லாத விண்கலத்தை, நிலவுக்கு அனுப்பி வைத்ததுடன் அந்த விண்கலம் நிலவில் நேற்று (15.12.2013) தரை இறங்கியது.

ஒரு விமானம் தரையிறங்கும் போது எப்படி மோதாமல், சேதம் அடையாமல் இறங்குவது போல், விண்கலம் நிலவில் தரை இறங்கியுள்ளது இது கடந்த 40 ஆண்டுகளில் இவ்வாறு ஒரு விண்கலம் நிலவில் இறங்கியது இதுவே முதல் முறை.

அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன் ஆகிய நாடுகளை தொடர்ந்து, நிலவில் விண்கலத்தை தரை இறங்கச்செய்த சாதனையை சீனாவும் படைத்துள்ளது என்பதுடன் இந்த விண்கலத்தை, சீன விஞ்ஞானிகள் தமது நாட்டிலேயே தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment