Tuesday, October 29, 2013

இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரித்தானியாவில் கொலை !

பிரித்தானியாவில் தெற்கு யோர்க்ஷையர் பகுதியிலேயே நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மேற்படி இளைஞர் மரணமடைந்து காணப்பட்டதாக செய்திகள் தெரிவி க்கின்றன.

கொழும்பைச் சேர்ந்த தவிஷா பீரிஸ்(வயது 25) என்ற இளை ஞரே இவ்வாறு கொல்லப் பட்டுள்ளார். இவர் கணினி மென்பொருள் கற்கையை மேற்கொள்வதற்காக 2011ஆம் ஆண்டு பிரித்தானி யாவுக்குச் சென்று பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்று வந்தார். இதனைத் தொடர்ந்து தனது கல்வியை முடித்துக்கொண்ட இவர் தனது கல்வித் தகைமைக்கு ஏற்ப தொழில்வாய்ப்பை ஒன்றை தேடிக்கொண்டிருந்த அதேவேளை, இவர் 'டொமினோ பிட்ஸா' என்ற நிறுவனம் அடங்கலாக முழுநேர வேலையில் ஈடுபட்டுவந்தார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் பிரித்தானியப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment