Tuesday, October 29, 2013

ஆப்கான் மற்றும் பாகிஸ்தானியர்கள் இலங்கையில் புகலிடக்கோரிக்கை!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பலர் இலஙகையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தில் அகதிகளாக பதிவுசெய்வதாகவும் இதானால் இவ்வாறு பதிவு செய்பவர்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவதாக குடிவரவு குடியகல்வு பணிப்பாளர் சூலாநந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் அகதிகளாக பதிவுப்பெறும் இந்த வெளிநாட்டவர்கள் குறித்த நாடுகளில் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களா? என்பது தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்படுகின்றன எனக்குறிப்பிட்டார்.

தற்போது அகதிகளாக வரும் பாகிஸ்தானியர்கள் பலர் குடும்பங்களாக வருவதாகவும் அவர்கள் போதியளவு பணத்துடனேயே இலங்கைக்கு வருவதாகவும் சூலாநந்த பெரேரா தெரிவித்தார்.

No comments:

Post a Comment