Monday, April 15, 2013

இந்தியத் தூதுக்குழு அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியாவின் ஆறு பேர் அடங்கிய பாராளுமன்றக்குழுவினர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை அவரது அமைச்சில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இந்தியாவின் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்களைக்கொண்ட குழுவினரே குறுகிய கால விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளனர்.

இச்சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார அபிவிருத்தி மற்றும்முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.

(கேஎப்)

No comments:

Post a Comment