Monday, February 11, 2013

விபத்தில் கடற்படை வீரர் பலி, மேலும் ஒருவர் படுகாயம்

அம்பாறை பொத்துவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற ரிப்பர் ரக வாகனத்துடன்; அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கிச் சென்ற கடற்படையினரின் மோட்டார் சைக்கிளுமே மோதி விபத்திற்குள்ளானதில் கடற்படைவீரர் ஒருவர் பலியாகியுள்ளதோடு மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ன்று திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்திலிருந்து சென்ற கடற்படை வீரரான எம்.கே.வி.ரணசிங்க ஜயசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இவ்விபத்து தொடர்பான விசாரணையை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment