Monday, February 11, 2013

வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற நபர் மாட்டினார்.

மாலைத்தீவிற்கு ஒரு தொகை வெளிநாட்டு நாணயங்களை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக கடத்த முயன்ற நபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து ஏராளமான அமெரிக்க டொலர்கள் உட்பட மேலும் பல நாடுகளின் நாணயத்தாள்கள் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன என சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட நாணயங்களின் பெறுமதி 33 இலட்சம் ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.

No comments:

Post a Comment