Sunday, February 17, 2013

கஹவத்தையில் நடந்த 14 கொலைகளினதும் சூத்திரதாரி யார்?

கஹவத்தை பொலிஸ் பிரிவிலுள்ள கொடகெத்தன மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களில் கொலை செய்யப்பட்ட 15 கொலைகளிலும் 14 கொலைகளை ஒரு குழுவினரே செய்திருப்பதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

வெளிவந்துள்ள தகவல்களின்படி,கொடகவெல பிரதேச சபை உறுப்பினர் தர்மசிறியும் அவரது சகோதரரான ராஜுவையும் சூழ்ந்திருந்த போதைப் பொருள் பாவனையாளர்களுமே இந்தக் கொலைகளுக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டும் எனக் கூறப்படுகிறது. ‘மாலு ராஜா, அபய பிரியன்த எனும் இருவரும் தர்மசிறியினதும் அவரது தம்பியினதும் பலத்திற்குப் பயந்து இந்த கொலைகளுக்கு உடந்தையாக இருநத்தாகத் தெரியவருகிறது.

இந்த அனைத்துக் கொலைகளும் ஒரே அமைப்பில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதையும், கொலையாளிகள் சமயோசிதமாக சிற்சில மாற்றங்களைச் செய்துள்ளதையும் விசாரணைக் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

(கேஎப்)

No comments:

Post a Comment