Thursday, January 24, 2013

இராணுவத்தளபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை அறிக்கை பாதுகாப்பு செயலரிடம் கையளிப்பு

இராணுவ தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவினால் நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணைச் சபையின் அறிக்கை, பாதுகாப்பு செயலர் கோத்தாபாய ராஜபக்சவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இராணுவ தளபதியினால் நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணைச் சபையின் அறிக்கையை இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் இராணுவத்தளபதி பாதுகாப்பு செயலரிடம் கையளித்தார்.

இறுதி யுத்தத்தின் போது இராணுவம் மனித உரிமை மீறல்கள் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக ? சர்வதேச யுத்த விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா? என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே இராணுவ விசாரணை சபை, இராணுவ தளபதியினால் நியமித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment