நீண்டகாலமாக நிவர்த்தி செய்ய முடியாத குறையாக காணப்பட்ட வடமாகாண இளைஞர்யுவதிகளின் தொழிற்பயிற்சி தேவைகளை இனங்கண்டு அதற்கு ஏற்றவாறு விசேட வேலைத்திட்டங்களை துரித கதியில் அமுல்படுத்த இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய அமைச்சர் டலஸ் அலகப்பெரும, இளைஞர் விவகார அமைச்சுக்குரிய சகல நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
இதன் முதல்கட்ட நடவடிக்கையாக யாழ் மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட தொழில் பயிற்சி செயற்பாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.
வடக்கை போன்று கிழக்கு மாகாணத்திலும் தொழில்பயிற்சி பாடநெறிகளை நடாத்துவதற்கான விசேட வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் உயர் கல்விக்கான வாய்ப்பினை பெறாத இளைஞர் யுவதிகளுக்கு தொழில்சார் திறன்களை பெற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைக்குமென அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment