பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் மேற்கொண்டு எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது பற்றி கலந்துரையாடுவதற்காக அரசாங்கத்தின் இணை கட்சிகளின் தலைவர்களுடனான அவசர கூட்டத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
பாராளுமன்ற பிரேரணை தொடர்பிலும், தெரிவுக்குழுவில் எதிர்கட்சிகள் வெளியேறியுள்ள நிலையில் இவ்விடயங்கள் தொடர்பான அடுத்த நகர்வுகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment