Wednesday, December 12, 2012

கோண்டாவில் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் நால்வர் பொலிஸாரால் கைது

யாழ்.கோண்டாவில் பகுதியில் சிங்களவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த இளம் கணவன் மனைவி ஆகியோரும் குறித்த மனைவியின் தந்தை மற்றும் சகோதரன் போன்றோருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

புன்னாலைக்கட்டுவன வடக்கில் உள்ள வீட்டில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இளம் கணவன் மனைவி கைது செய்யப்பட்டார்.

இந் நிலையில், நேற்றைய தினம் அவ்விருவருக்கு உணவு எடுத்துச் சென்ற மனைவியின் தந்தை மற்றும் சகோதரன் ஆகியோரும் கைதாகியுள்ளனர்

No comments:

Post a Comment