Wednesday, December 12, 2012

பிரதம நீதியரசர் தொடர்பில் ஜனாதிபதி முதற்தடவையாக கருத்து.

இலங்கையின் பிரதம நீதீயரசர் ஷிரானி பண்டார நாயக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றவியல் பிரேரணை தொடர்பான விசாரணைகள் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முதற் தடவையாக கருத்து வெளியிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே ஜனாதிபதி இது தொடர்பில் தமது கருத்தை வெளிப்படுத்தினார்.

பிரதம நீதியரசருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் தாம் ஒரு சட்டத்தரணி என்ற வகையில் முதலில் கவலை தெரிவிக்கின்றேன்.

நீதியரசருக்கு எதிராக முதலின் என்னிடம் புகார் தெரிவிக்கப்பட்ட போது அது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்க உத்தரவிட்டேன் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்த நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், தப்பு செய்தவர்கள் யாரானாலும் சட்டத்தின் முன் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment