Wednesday, December 5, 2012

யாழ்ப்பாணத்தில் ஒன்பது பேரைக் காணவில்லை?

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து 09 பேர் இதுவரையில் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருபாலை கோப்பாய் உரும்பிராய் சாவகச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு இவர்கள் காணாமல் போயுள்ளதாக கோப்பாய், சாவகச்சேரி ஆகிய பொலிஸ் நிலையங்களில் முறையிடப்பட்டுள்ளது.

நேற்றிரவு முதலே இவர்கள் அனைவரும் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவர்கள் காணாமல் போனது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்திலும் முறையிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment