Thursday, December 6, 2012

தனியார் வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக மோசடி செய்த பெண் பொது மக்களால் மடக்கி பிடிப்பு

தனியார் வங்கியொன்றில் கடன் பெற்றுத்தருவதாகக் கூறி பொது மக்களிடம் பெருமளவு பணம் மோசடி செய்த பெண்ணொருவரை பாதிக்கப்பட்ட மக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.இச்சம்பவம் கடந்த 29ஆம் திகதி கொழும்புத்துறைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வங்கியில் கடன் பெற்றுத்தருவதாகக் கூறி குறித்த பெண் பொது மக்களிடம் நான்கு லட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்டுகின்றது.

குறித்த பெண்ணை மடக்கிக் பிடித்த பொது மக்கள் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment