Monday, December 10, 2012

பல்கலை.மாணவர்களின் விடுதலையை வலிறுத்தி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்.

.
கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், கைது செய்யப்பட்ட ஏனைய பொது மக்களின் விடுதலையை வலியுறுத்தியும் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த ஆர்ப்பாட்டத்திற்கான ஒழங்குகளை மேற்கொண்டுள்ளது.

'எமது நிலம் எமக்கு வேண்டும்', 'கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனே விடுதலை செய்', 'பல்கலை விடுதிக்குள் இராணுவமே உனக்கு என்ன வேலை' மற்றும் 'அரச பயங்கரவாதம் எமக்கு வேண்டாம்' போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்கொண்டனர்.


No comments:

Post a Comment