Tuesday, December 11, 2012

கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் வெலிகந்தைக்கு மாற்றம்?

பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் வெலிகந்தை சிறப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத் தரப்புகள் தெரிவித்துள்ளன. தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களில் ஏழு பேர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர், உள்ளிட்ட இரண்டு பீடங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மாற்றப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படலாம் என்றும் எதிர்வு கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment