Wednesday, November 21, 2012

அரசாங்கம் பொய் சொல்கின்றது. ஆர்ப்பாட்டத்தை நிறுத்த முடியாது.

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு நிலுவைகள் யாவும் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிப்பது முழுப்பூசனிக்காயை சோத்துக்குள் புதைக்கும் பொய்யென இன்று நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஆசிரியர்கள் அதிபர்களுக்கான சங்கம் .சார்பில் பேசிய மகின்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியும் , கல்வி அமைச்சரும் முரண்பட்ட கருத்துக்களை கூறுவதாக கூறியுள்ள அவர் எதிர்வரும் நான்காம் திகதி அரசிற்கு எதிராக மேற்கொள்ளப்படவிருக்கும் ஆர்ப்பாட்ட பேரணிகள் நிறுத்தப்படமுடியாதவை எனத் தெரிவித்துள்ளார்..

No comments:

Post a Comment