அவுஸ்திரேலியாவில் நடைபெறும் விளையாhட்டுப் போட்டியில் யாழ்.மாணவன் ஒருவர் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.மெல்பேர்ன் நகர் அல்பேர்ட் பார்க்கில் நடைபெறும் விக்டோரியா விளையாட்டுப் போட்டியில் உயரம் பாய்தல் போட்டியில் பங்குபற்றிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வீரன் இரத்தினசிங்கம் செந்தூரனே இவ்வாறு இரண்டாம் இடத்தை பெற்று பதக்கம் வென்றுள்ளார்.
இந்தப் போட்டியில் இவர் 1.95 மீற்றர் உயரம் பாய்ந்து இரண்டாமிடத்தை பெற்றார்.
இவர் தேசிய கனிஸ்ட பிரிவு உயரம் பாய்தலில் 1.92 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனை நிகழ்த்தியதைத் தொடர்ந்தே அவுஸ்திரேலியாவில் நடைபெறும் விகேடாரியா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பினைப் பெற்றார்.


No comments:
Post a Comment