Monday, November 12, 2012

மன்னாரில் மீன்பதனிடும் நிலையம் தீயில் எரிந்து நாசம்

3மன்னார், பெரியகடை பிரதேசத்தில் இயங்கி வந்த மீன் பதனிடும் நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு ஏற்பட்ட தீ பரவலினால் அவ்நிலையத்தின் பல சொத்துக்கள் அழிவடைந்துள்ளதாகவும் இவ்விபத்து மின் ஒழுக்கு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என்றும் தெரியவருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்..

No comments:

Post a Comment