அல்லைப்பிட்டிப் பகுதியில் வீட்டுக் கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் சிவராசா ஜதுசன் வயது 5 என்ற சிறுவனே உயிரிழந்தவராவார்.
இவரது சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்த ஒரு வாராத்தில் இரண்டு சிறுவர்கள் ஊர்காவற்றுறைப் பகுதியில் தவறிக் கிணற்றுக்குள் விழுந்து மரணமாகியுள்ளனர்.
No comments:
Post a Comment