Tuesday, November 13, 2012

உகண்டா ஜனாதிபதி இலங்கை விஜயம்

உகண்டா ஜனாதிபதி யோவெரி ஹகுடா நேற்று திங்கட்கிழமை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டு கோளின்படி இலங்கை வந்த உகண்டா ஜனாதிபதி எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார். அவருடன் விசேட குழு ஒன்றும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.

உகண்டா ஜனாதிபதியுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.இந்நாட்டு வர்த்தகர்களுடனும் உகண்டா ஜனாதிபதி விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment