வடக்கில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள துடன், இதுவரை ஏராளமான வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன.
எஞ்சியுள்ள வீதிகளின் அபிவிருத்திக்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி, உதவ இணக்கம் தெரிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்டுள்ள நிதியின் மூலம், பிரதான மற்றும் பல்வேறு கிளைப்பாதைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இதற்கினங்க 98 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியுள்ளது. இதற்கு முன்னரும், வடக்கின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக, ஆசிய அபிவிருத்தி வழங்கி நிதி உதவி வழங்கியுள்ளமை, குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:
Post a Comment